Tuesday, 8 December 2015

Smart Card from டிஜிட்டல் டாஸ்மாக்

டிஜிட்டல் டாஸ்மாக் 
இது உண்மையான அரசு திட்டமல்ல., ஒரு கற்பனை திட்டம்


ஸ்மார்ட் கார்டு மூலமாக ஒரு நபருக்கு அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும்.,

நோக்கம் 
எலோரும் பூர்ன மதுவிலக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள்., பின் இரவு வந்ததும் மதுக்கடை செல்கிறார்கள்., இப்படி செய்வதால் யாருக்கு என்ன பலன்., இதன் மூலமாக மதுபிரியர்களை கட்டுப்பாடுக்குள் கொண்டு வரலாம்., முழுமையாக மது இல்லாவிட்டால் கள்ளசாராயம்., வெளி மாநிலங்களில் இருந்து மது கொண்டுவந்து பதுக்கப்படும்., இதை கட்டுபடுத்த இந்த டிஜிட்டல் டாஸ்மாக் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்கலாம்.,

ஸ்மார்ட் கார்டு வாங்குவது எப்படி
  1. ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் வோட்டர் id இந்த மூன்று ஆவணங்கள் இருக்கவேண்டும்
  2. 18 வயது பூர்த்தி ஆகவேண்டும்
  3. இந்த ஸ்மார்ட் கார்டு வழங்குதல் மற்றும் செயல்படுத்தளுக்காக 100 ரூபாய் வசூலிக்கப்படும்
  4. அரசு மருத்துவமனை மருதுவர்முலமாக தடையில்லா சாற்று வேண்டும்*** [இந்த நபருக்கு குறைந்தது ஒரு வருடம் மதுவால் பதிக்கப்படும் உடலுறுப்புகள் பாதிக்கபடாது] இந்த பரிசோதனை முதல் வருடம் வேண்டாம் 

ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துதல் 
  1. இந்த ஸ்மார்ட் கார்டு இல்லாமல் டாஸ்மாக் மதுபானம் வாங்க இயலாது 
  2. தொடர்ந்து மூன்று மாதம் மது வாங்காமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு 100 ரூபாய் ஊக்கமாக தொகை  கொடுக்கப்படும் 
  3. தொடர்ந்து ஆறு மாதம் மது வாங்காமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு செயல்இழந்துவிடும் 
  4. பிறகு மீண்டும் ஒரு வருடதிற்கு பிறகு புதிதாக விண்ணபிக்கலாம் 

ஸ்மார்ட் கார்டு பயன்கள் 
  1. குடிப்பவர்களை கட்டுபடுத்தலாம் 
  2. குடிப்பவர்களை உடல்நிலை ஆய்வுசெய்து*** பிறகு ஒவொரு ஆண்டு ஸ்மார்ட் கார்டு புதுபிக்கபடும் 
  3. ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு  அரசால் வழங்கப்படும் காப்பிடு திட்டங்கள் கிடையாது 
  4. பிற நிறுவனங்கள் கொடுக்கும் விபத்து மற்றும் அணைத்து வகை காப்பிடுகளும் செயல்படாது 
  5. ஒரு வருடதிற்கு பிறகும் ஸ்மார்ட் கார்டு புதுபிகவில்லை என்றல் அதற்கு பிறகு இந்த கார்டு வாங்க முடியாது

அளவு மற்றும் பயன்பாடு 
ஒரு நபருக்கு அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும்., ஒரு நாளைக்கு வாங்கிவிட்டால் வேறு எங்கையும் வாங்கமுடியாது எந்த ஸ்மார்ட் கார்டு mobile apps மூலம் உபயோகிபலர்களே டாஸ்மாக் location, products price, விடுமுறை நாட்கள், தனிநபர் கார்டு கலாவதி அறிவிப்பு, உடல் ஆரோக்கியதிற்கான விழிப்புணர்வு செய்திகள், மதுவால் பாதிக்க பட்டவர், மதுவை விட்டவர்களின் காணொளி கட்டுரைகள் போன்றவை இருக்கும்., 

விடை 
  1. இதன் மூலம் குடிப்பவர்களை கட்டுபடுத்தலாம்.,
  2. சமுதயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையை இந்த கார்டு குறைக்கும் என்பதை உணருவார்கள் 
  3. எந்த காப்பிட்டு சலுகைகளும் கிடையாது.,
  4. மது அளவாக வழங்கப்படும்., இதனால் விபத்துக்கள் குறையும்., வீண் சண்டைகள் குறையும்.,

குறிப்பு:
இந்த திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டது கிடையாது , இது கற்பனை திட்டம், இப்படி இருந்தால் நல்ல இருக்குமே என்று நினைக்கும் ஒரு தனி மனிதனின் கற்பனை., இந்த செய்தி தவறு விளைவிக்கும் பட்சத்தில் உடனே அளிக்கப்படும் [delete]., ஒரு வேளை திட்டத்தில் சில பல மாறுதலுக்கு பிறகு அரசு திட்டமாகலம்., எல்லாம் உங்கள் support இல் உள்ளது., 

நன்றி ரஞ்சித் முருகன்